السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

Saturday, January 3, 2015

சாதித்து காட்டுவோம் - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-01-2015 சனிக்கிழமையன்று ஆலந்தூரில் உள்ள ஏ.ஜெ.எஸ் நிதி மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

மேலும், இதில் சகோதரர் பாயாஸ் மற்றும் உமர் பாரூக் அவர்கள் கல்வியின் அவசியம் மற்றும் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எதற்காக பெற வேண்டும் மற்றும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள். இதில் கலந்துக் கொண்ட 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முஸ்லீம் தீவிரவாதம்...? வளைக்கப்பட்ட வரலாறும், வஞ்சிக்கப்பட்ட சமுதாயமும் என்ற தலைப்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!

0 comments:

Post a Comment